பக்கம்:கனிச்சாறு 4.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  225


‘ஏற்றநறுந் தலைமைக்கே
எள்ளளவும் எதிராமை,
எக்க ருத்தும்
போற்றுநிலை உண்டாயின்
புகழ்ந்தேற்கும் நல்லமனம்,
புகன்ற ஒன்று

தோற்றநிலை பெறுமாயின்
உவந்தேற்கும் பெருந்தன்மை,
பிறர்க ருத்தில்
மாற்றுநிலை உளதாயின்
மனங்கொள்ள மறுத்துரைக்கும்
மாண்பும் வேண்டும்!

தொடக்கத்தில் விறுவிறுப்பும்,
படிப்படியாய் விளர்விளர்ப்பும்,
தொய்வும் வேண்டா!
படக்கத்திப் போராட்டப்
படபடப்பும் துடிதுடிப்பும்
பயனே இல்லை!

இடக்கற்ற அமைந்தவுரை
எள்ளலில்லா நறும்பேச்சோ
டெதிரி கட்கும்
அடக்கத்தைக் கற்பிக்கும்
பண்புநடை, அயர்வின்மை-
அனைத்தும் வேண்டும்!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/260&oldid=1444653" இலிருந்து மீள்விக்கப்பட்டது