பக்கம்:கனிச்சாறு 4.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உஎ


136. இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் மதிப்பளித்துத் தமிழைப் புறக்கணிக்கும் நிலையில் தமிழ்த்தாய் வாடுகிறாள் - என்கிற செய்தியை தம்பிக்குக்கூறி தமிழை வாழ்விக்க அழைக்கிறார் பாவலரேறு.

137. எந்த ஒரு செயலையும் முன்னவர் சொன்னார் என்பதற்காகவோ, இன்னவர் புகழ்ந்திட்டார் என்பதற்காகவோ ஏற்காமல் சிந்தித்துப் பார்த்தே செயல்படுவீர் என அறிவுறுத்துகிறது இப்பாடல்.

138. “இன்றைய உலகம் பொய்ம்மையும் புரட்டும் இருக்கும் உலகம், எனினும் சோர்வடையாதே உயர்வானவை எண்ணி, உயர்வடை!” -என்கிறது இப்பாடல்.

139. அடிமையில் உழன்று விடிவை எண்ணாமல் மடிவதோ இன்னமும் தம்பி - உரிமை முழக்கடா - என்று உரமேற்றுகிறார் பாவலரேறு.

140. மொழிக்கு நீ உழை, உன் இனத்துக்கு உலகுக்கு நீ வாழ் - விலையிலை உனக்கு. விண்வரை புகழ் கொள்! - என்கிறார் பாவலரேறு.

141. அன்பு செய்தல், அறிவுபெறல், பிறர் நலத்துக் குழைத்தல்போல், நேற்றிலிருந்து இன்றுயர்தலே வாழ்க்கை - என்று விளக்குகிறார் பாவலரேறு.

142. உன்னை வயப்படவைக்கவும், உன் வாழ்வழிக்கவும் நிறைய இழிவுகள் உள. விலைமதிப்பற்ற உன் வாழ்வை - நிலை நெடுந்தொண்டால் நிலை நிறுத்துவாய் - என தம்பிக்கு அறிவுறுத்துகிறது இப்பாடல்.

143. இருப்பதில் குறைகூறிக் கொண்டிராமல் உருப்படியான நெருப்புழைப்பாலே சிறப்புகள் நிகழ்த்த இயலும் - என்கிறார் பாவலரேறு.

144. உன்னுடையது என்று ஒன்றில்லாமல் அனைத்தையும் பொது என்று எண்ணுவதோடு உன்னுடைய உரை தகுதிசேர் உரையென நடையிடு எனத் தம்பிக்கு உணர்த்துகிறார் பாவலரேறு.

145. தொய்வில்லாமல், துவளாமல் துணிவோடும் ஊக்கத்தோடும் கடமையாற்றினால் அதுவே நிலைக்கும் என்கிறார் பாவலரேறு.

146. உழைத்திட உடன்வராமல் உழைப்பின் ஈட்டத்தில் பங்கு கொள்ளக் கூசாமல் வருவோரை எண்ணி வருந்தாதே - தம்பி ஒவ்வாதவரை ஒதுக்கிச் செய்; ஊக்கத்தைக் கைவிடாதே - என ஊக்கப்படுத்துகிறார் பாவலரேறு.

147. திரைப்படக் கவர்ச்சியால் குழந்தைகளும், இளைஞர்களும், பாவையரும் நெறிதவறுகிற நிலைக்கு வருந்தி நெருக்கி அவற்றை வீழ்த்திடாவிடில் வீழ்ந்திடும் பண்புகள் பெருமைகள் கொண்ட நம் நாடு - எனக் கவலுறுகிறார் பாவலரேறு.

148. கவர்ச்சிக்கு மயங்காமலும், தோல்விக்கும். தூற்றலுக்கும் துவண்டிடாமலும் மனத்தில் திண்மை யோடும் நேர்மையோடும் செயல்படின் வெற்றி எதிர்வருமே! என்று அறிவுறுத்துகிறார் பாவலரேறு.

149. இருளிலும் விழித்திடு கொள்கை நிலைத்திடு! - என இளைஞர்கள் மனங்கொள வேண்டிய அறவுரைகள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/28&oldid=1444675" இலிருந்து மீள்விக்கப்பட்டது