பக்கம்:கனிச்சாறு 4.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உஅ

கனிச்சாறு நான்காம் தொகுதி


150. நோக்கம் இலாத வாழ்வு எவ்வகையில் வீணாகும் என்று விளக்குவதோடு, பொதுநல உணர்வே நோக்கம். அதுவே புதுப்புது விளைவுகளுக்கும் ஊக்கம் என்றுணர்த்துகிறார் பாவலரேறு.

151. மொழியைப் பேணவும், இழிவைப் போக்கவும். பொதுமை மலர்த்தவும், எண்ணிப்பார்க்க வேண்டும் எனத் தம்பியை எண்ணத் தூண்டுகிறார் பாவலரேறு.

–இயக்கம்–

152. உலகத் தமிழின முன்னேற்றக் கழகத் தொடக்க நிகழ்ச்சிக்கு (1981) முன்பான தென்மொழியில் வெளிவந்த பாடல் இது. உலகத் தமிழினம் ஒன்றெனத் திரண்டு, உரமிகு கொள்கை அமைத்து எழுந்துள்ளதாக உ.த.மு.க. இயக்கத்தைச் சுட்டி மகிழ்கிறார் பாவலரேறு.

153. வலிமையானதோர் இயக்கம் செய்வதற்காகத் தமிழர்களை, அறிஞர்களை, தோழர்களை, இளைஞர்களை, தாய்க்குலத்தோரை, கலைஞர்களை, நண்பர்களை அழைக்கிறார் பாவலரேறு.

154. மொழி, இன, நாட்டினை மீட்காமல் பேசுபவர்கள் பேசட்டும், தூங்குபவர் தூங்கட்டும், நமை ஏசியவர் எல்லாரும் ஏசிக்கொண்டிருக்கட்டும் - நாம் அவரை யெல்லாம் நினைத்தல் வேண்டாம். நடுங்காத நாவினராய் மொழி, இன நாட்டை காக்க இணைபவர்கள் இணைவோம் என்று இயக்கம் நோக்கி அழைக்கிறார் பாவலரேறு.

155. பாவலரேறு அவர்கள் முதல்வராய் இருந்து தொடங்கிய உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் ஏழு கொள்கைகளான -

1) தூய்மையான தமிழ்மொழி முன்னேற்றம்

2) சாதியற்ற, மதவேறுபாடற்ற சமநிலைக் குமுகாயம்

3) இழிவுகளும் பூசல்களும் ஏமாற்றும் இல்லாத அரசியல்

4) தமிழ்த்தேசிய இனத்திற்குப் பொருந்திய பொதுவுடைமைப் பொருளியல்

5) மனம், அறிவு, வாழ்க்கை - இவற்றை வளப்படுத்தவும், நலப்படுத்தவுமான அருவருப்பற்ற கலை வளர்ச்சி.

6) எல்லாவற்றிலும் காலத்திற்கேற்ற அறிவியல் அணுகுமுறை.

7) பழந்தமிழ் மரபுக்கும் மாந்தவியல் சிறப்புக்கும் ஒத்த பண்பாட்டுப் பரிமாற்றம். இவற்றை விளக்கி அதைச் செயற்படுத்துவதில் உலகத் தமிழினம் ஒன்றுபட்டுக் கழக முன்னேற்றம் காண்குறுவோம் என்றழைக்கிறார் பாவலரேறு.

156. தமிழ் காக்கவும், தமிழினம் மீட்கவும், செந்தமிழ் நாட்டினைச் சருறப் பேணவும் உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தில் வந்து பொருந்துக - என்று அனைவரையும் அழைக்கிறது இப்பாடல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/29&oldid=1444677" இலிருந்து மீள்விக்கப்பட்டது