பக்கம்:கனிச்சாறு 4.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 33


உலகிருக்கும் மக்களெலாம்
உழைத்துணத்தான் வேண்டுமெனில்
உழைப்பறியார் வாழுவதோ
தம்பியே தம்பி - பலர்
உடல்வருந்தித் தாழுவதோ
தம்பியே தம்பி!

மாந்தருக்குள் வேற்றுமைகள்!
மனம்வளரா நாகரிகம்!
மனம்வளரா நிலையில்அது
தம்பியே தம்பி - வெறும்
மணல்மேடு போன்றதடா
தம்பியே தம்பி!

-1969


19

விளம்பர உலகில் விலைபோகாதே !


வண்ண ஓவியம் மின்னும் முகப்புகள்!
எண்ணிக் கொள்வாய் தம்பி! இவையெலாம்
உன்னை மூழ்க்கின்ற ஓட்டைப் படகுகள்!
உன்னை வீழ்த்திடும் ஓங்காரப் பள்ளம்!
விளம்பர உலகில் விலைபோ காதே!
குளம்பொலி இசையெனக் குழம்பி டாதே!

மீசை முளையா இளைஞர் யாவரும்
காசைத் திரட்டக் கதைகள் எழுதி
அரையாடை யோடும் அம்மணத் தோடும்
உரையாட லோடே ஒளிப்படம் நிரப்பி 10
இதழ்நடத்து கின்றார்! இவற்றை யெல்லாம்
புதுமை விரும்பும் புன்மைத் தம்பிகள்,
எதுதம் தேவை என்றுண ராமல்,
கோமாளித் தனத்துக்கு ஏமாறுந் தங்கைகள்
ஈமொய்ப் பதுபோல் ஏறிட்டு வாங்கி
அணுஅணு வாகத்தம் அறிவை இழந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/68&oldid=1440504" இலிருந்து மீள்விக்கப்பட்டது