பக்கம்:கனிச்சாறு 4.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 43


உள்ளத்தால் பேசிடு;
உரைக்குச் செவிகொடு;
கள்ளத்திற் கஞ்சு;
கனிவுக்குக் கனிவு செய்;
பள்ளங்கள் நயத்திலும்
பணிவிலும் இருக்கலாம்;
எள்ளலை எடுத்தெறி!
எழு,நட! தொண்டன், நீ!

-1970


27

பாட்டெழுது!


பாட்டெழுது! தமிழ்ப்
பாட்டெழுது! - இந்தப்
பாரினில் உள்ளவர் பாட்டெழுது!
கூட்டில் உயிரினில்
யாவரும் ஒன்றென
எடுத்துரைக் கும்ஒரு
பாட்டெழுது! - புதுப் - பாட்டெழுது!

ஏட்டை எடு; ஒரு
தூவலெடு!, நன்றாய்
எண்ணிய பின்ஒரு பாட்டெழுது!
நாட்டைத் திருத்திட
நலிவை ஒழித்திட
நாளும் விளங்கிடும்
பாட்டெழுது - தம்பி - பாட்டெழுது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/78&oldid=1440517" இலிருந்து மீள்விக்கப்பட்டது