பக்கம்:கனிச்சாறு 5.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்லை தரும்இழி சாதிப் புகைச்சலை
மூட்டினார் - வாய்
நீட்டினார் - உன்
தொல்தமிழ் மக்களை வேற்றுமைத் தீயினில்
வாட்டினார் -துயர்
கூட்டினார்!

பள்ளிப் பறவையே! ஒன்றுனக் கோதுவேன்;
கேட்டிடு - உளம்
நாட்டிடு!- கொடும்
பல்வழி போகுநின் மக்களை ஒன்றெனக்
கூட்டிடு வழி
காட்டிடு!

உள்ளத் துயர்வே உயர்வெனக் கூறுக
பிள்ளையே தமிழ்க்
கிள்ளையே! - நெஞ்சில்
உண்மையும், வாழ்வில் ஒழுங்கும் இலார் கண்கள்
நொள்ளையே - காது
தொள்ளையே!
-1966

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/108&oldid=1423580" இலிருந்து மீள்விக்கப்பட்டது