பக்கம்:கனிச்சாறு 5.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


137

அம்மா என்னை அழைத்துச் செல்!


அம்மா என்னை அழைத்துச் செல்!
அம்மா என்னை அழைத்துச் செல்!

சும்மா இல்லை, பெரியவன் ஆவேன்;
சோறு போடுவேன்; அழைத்துச் செல்!
இம்மாம் பெரிய உலகினில் தனியாய்
என்னை விடாதே; அழைத்துச் செல்!

ஊருக் கெல்லாம் உழைப்பேன்; மக்களுக்
குற்றது செய்வேன் அழைத்துச் செல்!
பேருக்குக் களங்கம் விளைத்திட மாட்டேன்!
பெருமை செய்வேன் அழைத்துச் செல்!

கருத்தாய்க் கற்பேன்; கற்பதில் நிற்பேன்;
கையைப் பிடித்தே அழைத்துச் செல்!
குருத்துச் செடிநான்; பெருமரம் ஆவேன்!
குளிர்நிழல் தருவேன்; அழைத்துச் செல்!

-1987
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/170&oldid=1444936" இலிருந்து மீள்விக்கப்பட்டது