86 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
இக்காலம் மட்டும் அந்த
இசையினை அவள் பாட்டென்று
இருந்திட்டாய்! தேனின் வண்டும்
இதழ்ச் சுவைத் திசைக்கும் பாட்டே!
பொன்னிற முகத்தைக் காட்டிப்
பூரித்து நகைப்பதும் நான்
புரியாம லில்லை! உச்சிப்
பொழுதினில் குளத்தை அண்டி
கண்ணாடி ஊற்று நீரைக்
காண்பேன்! அப்போது நீர்க்குள்
கதிரொளிக் கையை விட்டே
அவளிடைக் கொடியை நீவ
கண்களில் சிரிப்பை மாய்த்து
நாணத் தோ டென்னைக் கண்டு
நகைப்பதை யறிவேன்! வாளின்
கதிரே யங் கென்ன செய்வாய்?
காலையி லிருந்து காதல்
களிநடம் புரிவதும், உன்றன்
கைகளில் அவள்மு கத்தைத்
தோய்ப்பதும், நகைப்ப தும், பின்
மாலையில் பிரியும் போது
மனம் நொந்து சாவதும், நீ
மலர்முகம் தன்னை நீவி
தேற்றுதல் செய்வதும் நான்
சோலைக்குச் சென்றால் அந்தப்
பொன் கொடி என் பால் எல்லாம்
சொல்வதும், இரவில்
வெண்மதி அவள்பாற் காதல்
வேலைகள் செய்வதும் நான்
விளங்கிக் கொள்ளாம லில்லை!
விரிகதிர் பரிதியே! உன்
வினையினைக் காண்கின் றேனே!
-1952 (?)