பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 91
62
காவிரித் தாய்!
பூவிரித்தாய்; வண்ணப்
பொழில்விரித்தாய்; தென்னைத்தேன்
மாவிரித்தாய்; வாழைப் பலாவிரித்தாய் - நாவரிக்கப்
பாவிரித்தேன் பண்டைப் புகழ்பாடும் வண்டினஞ்சூழ்
காவிரித்தாய் காவிரித்தாய் என்று
1
நீர்பெருக்கிப் பச்சை நிலம்பெருக்கி அச்சாகும்
ஏர்பெருக்கி நெல்லோ டுயிர்பெருக்கி - ஊர் பெருக்கிப்
பார்பெருக்கிப் பண்டைப் புலவரெலாம் பாப்பெருக்கப்
பேர்பெருக்கிக் கொண்டாய் பெரிது
2
கெண்டை புரளக் கிளர்த்தெழுந்த நெற்பயிரைக்
கொண்டை மலர்மூடிக் கொண்டிருக்கும் - பெண்டிரெலாம்
வாரிச் சுருட்டுகையில் “வாழ்வீர் தமிழரெ”ன்று
நீரிற் சுருட்டுவையோர் பாட்டு
3
நீர்க்குவளை சேர்ந்துவரும் நெற்பயிரோ டின்னொலிசெய்
தார்குவளைப் பெண்டிர் அகமகிழ - கார் குழுமிப்
பாடல்செய் தேத்துமுன்றன் பக்கலுள்ள மஞ்ஞையினம்
ஆடல்செய் தேத்துமுன் அன்பு
4
கன்னல் அளித்தும் கனியளித்தும் வான்தோயும்
தென்னை அளித்துந் தேன்கதலி - தன்னோடே
உன்னை அளித்தும் உயிரளித்தும் வந்தாய் நீ
என்னை அளியோ விது.
5
கிளிகொஞ்சும்; வெள்ளைக் கிடைநாரை துஞ்சும்;
அளிகெஞ்சும்; அம்மலர்த்தேன் சிந்தும் - இளிச்சேர்கண்
மந்தி மரம்பாயும்; மன்னுதமிழ்த் தொல்பெருமை
குந்திக் குயில்கூவுங் கோடு.
6
மேடுகளை நீக்கி மிகத்தாழ் நிலன்நோக்கி
ஓடுவதேன்? உன்றன் உளச்சிறப்பைப் - பாடுவன்கேள்!
மேலக் குடியென்போர் மேவாரோ? மேவுவாரோ
ஓலைக் குடிலோர் உனக்கு?
7