இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 97
பல்லி, தேள், பாம்புகளே! - தீமை
பாய்ச்சும் உயிரினங்காள் ! - உங்கள்
இல்லங்கள் தப்பி - எம்
இடைவந்து வாழ் வாரை
என்றைக்கு மீட்பீரோ?
பொறுமை நிறைநிலமே! - வான்
போர்த்த உருள் உலகே - நெஞ்சில்
வெறுமையும் சூதும்
வெறுப்பும் மிகுந்தாரை
வெடித்து விழுங்காயோ?
-1970