இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 111
செங்குருதி வெண்பாலாய்ச் செய்வதுவும் வெண்பாலைச்
செங்குருதி யாய்ப்பின் றிரிப்பதுவும் - பூவுள்
மதுமணத்தைக் கூட்டி மயக்குவித்தும் நிற்ப
தெதுவோ அதுவே இறை.
8
அறியார்க் கறியாதாய் ஆழ்ந்தார்க் கறிவாய்ச்
செறிவாய்ப் பொருளெல்லாஞ் சேர்ந்தொளிர்ந்து - நின்றே
எதுபோழ்தோ வென்றார்க் கிதுபோழ்தே தோற்றும்
எதுவோ அதுவே இறை.
9
வித்தாய்க் கருவாய் வெளிர் குடம்பை யாய்த்தோன்றிப்
புத்தின் முளைமகவாய்க் குஞ்சாய்ப் - புறந்தந்து
வெஃகின் பெருவிளை வாயி யஃகுமொன்
றெஃதோ அதுவே இறை.
10
-1962!