112 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
75
உணர்வுப் பத்து!
தாயுந் தாதையுஞ் சுற்றமும் மகிழத் தாம்பிறந்து
வாயுங் கையும் வயிறும் புடைக்க வலிந்துண்டு
நோயும் நொடியுந் தேடுவர் உய்யார்; நொடிந்திறப்பின்
நாயும் நரியும் அன்றிப் பிறரார் நண்ணுவரே?
1
உள்ளும் நெஞ்சும் உயிரும் இருக்க உலகினர்பால்
கொள்ளும் அன்புந் தொண்டும் இருக்கக் கூசாமல்
கள்ளுங் கலவியும் உயர்வென் றெண்ணிக் களிப்பாரைப்
புள்ளும் புழுவும் அன்றிப் பிறரார் போற்றுவரே?
2
ஒழுகும் முறைமை ஒழுகார் உயர்ந்தோர் உரைமதியார்
அழுகும் பொருட்கும் உடற்குந் தணியா தங்காந்து
முழுகும் தொழுகையும் செய்வார்; உள்ள முனைப்பிலரைக்
கழுகுங் காகமும் அன்றிப் பிறரார் களிப்பாரே?
3
கண்டது காட்சி கொண்டது கோலம் கவின்பழுத்த
பெண்டரு இன்பே பெரிதா மென்றே பிழைசெய்வார்;
தொண்டும் புரியா துளமும் பேணா திருப்பாரை
உண்டது பேசிப்புகழும்; பிறரார் உவப்பாரே!
4
தேறார்; உள்ளந் தெளியார்; வாழ்க்கைத் திறனறிந்து
மாறார்; அன்புஞ் செல்வமுந் தொண்டும் பிறர்க்களியார்;
ஏறார் வாழ்வில்; இத்தகை யோரைப் பித்தல்லால்
வேறார் போற்றிப் புகழ்வார்; நினைவார்; விழைவாரே!
5
ஈன்றிய வர்க்கும் இனத்தார்க் கும்நிலை இழிந்தார்க்குந்
தோன்றிய குடிக்கும் மொழிக்கும் நாட்டுத் தொண்டிற்குஞ்
சான்றவர் துயர்க்குந் துணையா யிருமின்; மனம் வைமின்;
ஊன்றிய வாழ்விற் கொருபயன் காண்மின் உலகீரே!
6
விண்ணிற் பாய்வீர்! வேறுபல காள்வீர்! வியனுறவே,
நுண்ணிய அறிவாற் பற்பல ஆய்வீர்! உளம்பேண
எண்ணிட மாட்டீர்! உயிர்முனைப் பிழந்தீர்! கவாமல்
மண்ணிற் பிறந்த மக்களைப் பேண மறவீரே!
7