பக்கம்:கனிச்சாறு 6.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 கனிச்சாறு – ஆறாம் தொகுதி


84

ஒவ்வோர் உடம்பும் ஒவ்வோர் உலகம் !


ஒவ்வோர் உடம்பும்
ஒவ்வோர் உலகம்!
ஒவ்வோர் உடம்பிலும்
உள்ளியங்(கு) உயிர்தான்

உலகினில் உள்ள
இயற்கையை ஒத்ததாம்!
அலகிலா அணுக்களே
அனைத்துலக உயிரினம்!

மண்டுதசை எலும்பெலாம்
மண்ணும் மலைகளும்!
அண்டுசளி, கோழை
அடுபனி, குளிர்நிலை!

கடல்போல் அரத்தம்
கனப்பே நெருப்பு!
உடலிடை ஓடும்
உயிர்ப்புவளி காற்று!

மூளை, ஆ காயம்!
மூண்டறிவு றைமை!
ஈளையும் காய்ச்சலும்
எழுகுளிர், கோடை!

நம்முடல் உலகினை
நல்லாட்சி செய்திடும்
நம்மின் ‘நான்’ உணர்வே
நாடாளும் அரசனாம்!

அரசன் எவ்வழி
அவ்வழி குடிகள்போல்
இருக்கும் ‘நான்’ உணர்வே
இயல்பாய் இயங்கினால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_6.pdf/154&oldid=1445424" இலிருந்து மீள்விக்கப்பட்டது