இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 5
“இனிமைத்தேன் இளமைக் கொப்பே!
இதழுக்கு நாணம் ஒப்பு!
கனிகின்ற இளமை போல்தேன்,
கசியினும் நாணம் என்ற
அணியித ழிட்டு மூடி,
அடங்கப் பெண் பழக வேண்டும்;
துணிவது தீ” தென் றானாம்!
துள்ளிற்றென் உள்ளத் தன்பு!
9
-1948