பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 13
பூக்காரி வந்தாலோ ‘போபோபோ’ என்கின்றீர்!
பாக்குக்கும் வெற்றிலைக்கும் பாழுமனம் பட்டேனா?
தாய்கொடுத்த சேலை! திருமணத்தில்!! வந்துபோய்
ஆயிற்றோ ரைந்தாண்(டு); அதிலுமறு நூறுபொத்தல்!
நானென்ன கேட்க? நகைநட்டா? பட்டுடையா?
ஊணுண்ண மாட்டாமல் ஓரிரண்டு நாளா?
உயிருடலைத் தின்றூசல் ஆடுகின்றோம்: நீங்கள்
40
அயர்வின்றி எப்பொழுதும்
அன்பொழுகும் சொல்கூட்டிக்
காதலென்றும் வீரமென்றும் தீட்டுகின்றீர் செம்பாடல்!
ஊதற் குளிர்காற்றால் ஒட்டும் உடம்புக்குப் பாட்டென்ன?
இன்றே புறப்படுங்கள் என்னோடே!
தேட்டமுடன் வாழ்ந்துநாம் தேர்ந்தபணி செய்தே
பிழைப்ப’ மெனத் தூவலுந் தாளும் பிடுங்கிப்
பழைய துணி தன்னைப் பிடித்துக் கிழிப்பதுபோல்
தாளைக் கிழித்துத் தரையையென் தூவலினால்
ஆழ உழுதாள்; அதிலதனைப் போட்டு
விதைத்தாள்போல் மூடியளாய் வெற்றி முழக்கோடே
50
‘ததைத்தா’ வென் றாடிநின்றாள்; ‘தாளிலுள்ள பாடல்
முளைத்தாலும் நன்கு முளைக்கட்டும்; பின்பு
கிளைத்தாலும் நீண்டு கிளைக்கட்டும்’ என்றென்னைக்
கூட்டிச்சென்றாள் - என்றன் கூடுமட்டுந் தான்செல்ல
நாட்டிச்சென் றேனிதனை நான்!
-1951