இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 41
28
அழற் காதல்!
குயில்போலும் குரலினாள்;
குழலினாள்; குருகு மிக்க,
மயில்போலும் இயலினாள்;
இடையினாள்; மலர்வா யன்னம்,
பயில்கோளும் நடையினாள்;
பணிவினாள்; என்பீர்; ஆனால்
வெயில்போலும் அன்பினால்
வெய்தினாள் புழுவைப் போன்றே!
மரைபோலுங் கண்ணினாள்;
வாயினாள்; மதியாற் பொங்கும்,
திரைபோலும் உடலினாள்;
நெளிவினாள்; தீம் பா டற்கே,
உரைபோலும் சுவையினாள்;
நிறையினாள்; என்பீர்; ஆனால்
கரையேதுங் காண்கிலாள்;
நும்மினாள்; கடலன் பிற்கே!
மலர்போலும் விரையினாள்;
மென்மையாள்; மற்றார் அங்கே,
இலர்போலும் நினைப்பினாள்;
உயிர்ப்பினாள்; ஊரார் பேசும்,
அலர்போலும் பசலையால்
மருவினாள்; என்பீர் ஆனால்,
மலர்போலும் வாடினாள்;
நும்மினாள்; தழற்காதற்கே!
-1955