52 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
எனக்குத்தான் உரிமை என்பேன்; நேற்று வந்த
இன்னொருவன் தனக்குரிமை என்பான்; ஆனால்
சினக்கத்தான் துணிவேனோ? பால்ம ணக்கும்
சிறுவாயை அழகுபெறக் கூட்டி, என்றும்
இனிக்கின்ற தமிழ்மொழியால் “அப்பா” வென்றே
இயம்புகையில், அத்தான், நான் மகிழ்ந்து போவேன்;
தனிக்குன்றச் செந்தோளைக் காட்டு தற்குத்
தடம்பார்த்துக் கிடக்கின்றேன்! இங்ஙன் - கிள்ளை!
5
-1957
39
ஒட்டு மாங்கன்று
முல்லை! இவ் வீட்டிற்கு வந்தின் றோடு
முத்திங்க ளானாலும், உனக்கி ருக்கும்
தொல்லையினை அறியேன்; உன் கணவர் உன்னைத்
தீண்டாத மென்மலராய் வைப்பார் என்றும்,
எல்லையிலாத் துன்பம்நீ அடைவாய் என்றும்
எள்ளளவும் எண்ணவில்லை! நேற்று மாலை
கொல்லைக்கு நான்வர, நீ மறைந்து நின்றே
கொடுத்ததுவும் கடிதமென்றே அறியவில்லை!
1
காலையில்நான் அலுவலகம் செல்லும் போது கதவிடுக்கில் விழிசெலுத்தி முறுவல் - பூப்ப தூஉம் மாலையில்நீ குழல்முடித்துப் பின்னல் தொங்க மல்லிகைப்பூச் சரத்தையிட்டே உவப்ப தூஉம் சேலையினை வகைவகையாய் வேளைக் கொன்றாய்ச் சிற்றிடையில் ஏற்றியேற்றி உவப்ப தூஉம் ஓலையினைப் படித்துணர்ந்தேன்! ‘உன்றன் செய்கை ஒவ்வொன்றும் எனக்கேதான்’ என்னும் உண்மை! 2