பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 53
“மேவலுறும் மலரென்னைத் தீண்ட வில்லை!
மீட்டுகின்ற புலவனில்லா வீணை யானேன்;
ஆவலுறும் நெஞ்சினுக்கே அமுது வார்க்கும்
அருந்திறனை முதல்மனைவி வாங்கிக் கொண்டாள்!
நோவலுறா தென்னையொரு கனியாய்ப் பூவாய்
நினைத்தெவரும் தீண்டாமல் இருக்க வேண்டிக்
காவலுறு கின்றார்என் கணவர்” என்றே
கடிதத்திற் குறித்திருந்தாய்; கண்ணீர் விட்டேன்!
3
“தள்ளாத பருவமில்லை அவர்க்கும்; என்றும்
தணியாத ஆவலுக்கு வேலி போட்டுக்
கொள்ளாத நிலையெனக்கும்! என்ன செய்வேன்?
குணக்குன்றே அவரென்பேன்! ஆனால் என்ன?
கிள்ளாத மென்மலராய் உள்ளேன்! உள்ளம்
கிளத்த மொழியில்லை! வழியு மில்லை!
உள்ளாத நாளில்லை! உயிரை மாய்க்க
உறுதிபூண் டேன்” என்றாய்; முல்லை! வேண்டாம்!
4
உன்போல வே நானும்! கடந்த ஆண்டில்
ஒருத்தியினைக் கைப்பிடித்தேன்! ஒருதிங் கட்குள்
முன்போல எனைத்தனியே ஆக்கி விட்டே
மூடிக்கொண் டாள்விழியை, நோய்வாய்ப் பட்டே!
அன்போ, அன் றேல் அதனின் இன்ப ஊற்றோ
அறியவில்லை இன்றுவரை! ஆனால், முல்லை
உன்பாலொன் றுரைக்கின்றேன்; நீயும் நானும்
ஒட்டுமாங் கன்றினைப்போல் வாழ்ந்தா லென்ன?
5
எனைப்பிணைந் திருந்தகொடி இறந்த துன்னை,
ஏற்றிருக்கும் கொம்போசெல் லரித்த கொம்பு!
உனைப்பிணைய வைத்ததிக் கொடுமை மக்கள்!
உனக்கதுவே முடிவென்றும் பொய்ம்மை பேசும்;
வினைப்பயனே நீபெறுவ தென்றும் கூறும்!
வேறாக நீதியினை எனக்குச் சொல்லும்,
கனைப்புகளுக் கஞ்சாதே! “ஒப்பி விட்டேன்;
கவலையிலை” என்றெனக்குக் கடிதம் தீட்டு!
6
-1957