60 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
என்றெனைப் பல்வா றியம்பி இணங்குவித்து
அன்றை முழுவதும் அணியப் படுத்தினர்!
அன்று மாலைபோய் அன்பன் ஏந்தல்பால்
ஒன்றும் விடாமல் உரைத்தேன்; இசைந்தனர்,
மறுநாள் நான்செலும் மகிழ்ச்சியால்
திருநாள் போலத் திரிந்தனள் அன்னையே!
மானும் மயிலும் போலொரு பெண்ணை மனத்தெண்ணி,
யானும் ஏந்தலும் பாளையூர் நண்ணி நடைதாங்கிக்
காணுஞ் சோலையும் நெல்விளை கழனியும் பலதாண்டி
மீனும் நாரையும் மேய்தரு தெண்ணீர்க் குளங்கண்டோம்!
........................................
............................................
(முடிவுறாப் பாடல்)
-1960 (?)
45
கலித்துறை!
யானுந் தோழியு மாயமு மாடுந் துறைநண்ணித்
தானுந் தேரும் பாகனும் வந்தென் னலுணுன்டான்,
தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்
கானும் புன்றாங் கைதையு மெல்லார் கபிரியனிறே.
1
இறுதி முறையா யொருமுறை யவளை யிவனோக்கி
உறுதி பயப்பதா மோருரை நன்றா யுரைப்பானேல்.
2
.......................................................
..........................................................
(முடிவுறாப் பாடல்)
-1960 (?)