இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66 ☐ கனிச்சாறு – ஆறாம் தொகுதி
அவள்:
மீட்டிடத்தான் வேண்டுமெனில்
மின்னிழையைத் துறப்பதென்ன?
கூட்டிலடை பட்டகிளி யோ, நான்? - என்
கொள்கை, உயிர் யாவுந்தமி ழேதான்!
7
அவன்:
அப்படித்தான் செப்படியோ!
ஆண்டதமிழ்ப் பொற்படிவே!
எப்படிக்கும் முதற்படியே தமிழ்தான் - அடி
இப்படிவா; இனியுன்இதழ் அமிழ்தாம்!
-1969