பக்கம்:கனிச்சாறு 7.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


60

என்றன் வாழ்க்கை
மழையின் பொழிவு!


என்றன் உள்ளம்
வெட்ட வெளிச்சம்;
எங்கும் ஒளிவு மறைவில்லை!
என்றன் அறிவு
பழங்கள் தோட்டம்!
எவர்க்கும் உரிமைக் குறைவில்லை!

என்றன் செயல்கள்
நலம்விளை வயல்கள்!
எவரும் விளைவின் பயன் பெறலாம்!
என்றன் விளைவு
பொதுமைப் பூங்கா!
எவரும் நுகர்ந்தே மகிழ் வுறலாம்!

என்றன் வாழ்க்கை
மழையின் பொழிவு!
எவரும் நனைந்தே பருகிடலாம்!
என்றன் மறைவு
கதிரவன் வீழ்ச்சி!
எவரும் அதற்கே மெருகிடலாம்!
-1994

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/121&oldid=1446170" இலிருந்து மீள்விக்கப்பட்டது