பக்கம்:கனிச்சாறு 7.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  105


79

கழக ஆற்றுப்படை!


பெண்ணியல் போவியம் எண்ணியாங் கெழுதி
வண்ணம் பதித்த வழவழப் புத்தாள்
மின்னும் முகப்பொடு மிளிர்ந்திட உள்ளுரை
புன்மைக் கருத்தொடு பொலிவுறும் பொத்தகக்
கடைதொறும் புகுந்து கடாவித் திரியும்! 5
நடைமெலி மாணவ நல்லோய் கேளாய்!

புத்துலகம்புகு புதுமைக் காலத்து
நித்தலும் படித்திட நீ விரும் புவது
கலைநிறை முத்தமிழ்க் கழகநூ லாயினும்
நிலைபெற் றுயர்ந்த நெறிநூ லாயினும் 10
அறிவியல் தெரிக்கும் ஆய்வுநூ லென்னினும்
செறிவுறும் வாழ்வில் சிறக்குநூல் என்னினும்
பெருநூல் வாணிகப் பெயர்பெற் றோங்கிய
திருநெல் வேலிச் சைவசித் தாந்த
நூற்பதிப் பகத்து நுழைதல் நின்கடனே! 15
ஏற்புடை அதன்சிறப் பியம்பவும் அரிதே!

தீந்தமிழ் புரக்கத் திருவ ரங்கனார்
ஈந்தநற் பயனால் எழுந்தவக் கழகம்
மறைமலை யடிகளார் மாண்பினில் வளர்ந்தே
அரைநூற் றாண்டாய் ஆற்றிய தொண்டோ 20
தமிழ்வர லாற்றினும் தமிழகச் சிறப்பினும்
அமிழாப் பெயர்கொண் டகங்கமழ் வதுவே!

சுப்பையா வெனுமோ ரொப்பிலா மாமணி
முப்பொழு துந்தமிழ் முன்னேற் றத்தின்
விழைந்து நாடி வியத்தகு துறைபல 25
நுழைந்து புதுப்புது நூற்களாய்ப் பதித்தலை
எண்ணிய நெஞ்சம் இறும்பூ தெய்தும்!
பண்ணிலும் பாவிலும் பராவிக் களித்திடும்!
நுண்ணிய வினைத்திறம் நூலறி வுறுதிறம்
திண்ணிய மனவுரந் தேங்கியோ னவனே! 30

தொன்மைப் பெரும்புகழ்த் தொல்காப் பியமுதல்
நன்னூல் நம்பி யகப்பொருள் புறப்பொருள்
இறையனார் தண்டி காரிகை ஈறாய்
மறையா விலக்கண மாண்புறு நூல்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/150&oldid=1446207" இலிருந்து மீள்விக்கப்பட்டது