பக்கம்:கனிச்சாறு 7.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  113


ஊட்டுதற்கலையும் உள்ளமும் கையுமாய் 105
முப்பொழு திருப்பினும் முகங்கோ ணாத
குப்பம்மாள் எனும் குடித்தனக் காரிக்குச்
செப்பமாய் அமைந்த சிறப்பெலாம் என்னெனின்,
ஒப்புரைக் கில்லாத ‘தென்மொழி’ உழைப்பால்
உடலும் நெஞ்சமும் ஒருங்குறச் சோர்ந்து, 110
கடற்கரை நண்ணும் காலத்தி லெல்லாம்,
கையில் கிடைத்ததை, மடியில் நிறைத்ததை,
பையில் பானையில் கைவிட்டுத் துழவிக்
கொஞ்சங் கொஞ்சமாய்க் கூட்டிச் சேர்த்ததை
எஞ்சுத லின்றி எடுத்தெடுத் தீந்து 115
தென்மொழிக் குடும்பம் தின்று மகிழ்வதைத்
தன்விழிப் பருப்பால் தான்விழுங் குவதே!

பெருமாள் பெற்ற பெருமை எல்லாம்
திருக்குறள் ஒன்று! தேய்விலா அன்பின்
குப்பம்மாள் எனும் குணக்குன்று ஒன்று! 120
தப்பில் லாமல் தமிழ்ப்பணி செய்யும்
திருக்குறள் பெருமாள் குடும்பம்
இருக்குநாள் எல்லாம் இருக்குமெந் தமிழே!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/158&oldid=1446220" இலிருந்து மீள்விக்கப்பட்டது