பக்கம்:கனிச்சாறு 7.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


போரில் இறந்துபட்ட படைமறவர்க்கு இரங்கல்!

மைத்தடங்கள் மொய்த்தவழி வெறித்த தையோ!
மார்பகலத் துழுஞ் சிறுவர் கலுழ்வர் ஓ!ஒ!
வேய்த்தடந்தோள் தழுவவரும் உடன்பிறப்பார்
விம்மியழும் பேரவலம் யாண்டும்! யாண்டும்!
வைத்துமிழ்ந்த பெருவயிற்றின் தாயர்தம்மின்
வார்த்தெழுந்த விழிநீர்க்குள் வெற்றிபூண்ட
4கைத்துமுக்கிப் பெருமறவீர்! கீழ்வங் கத்தைக்
கனவினின்று நினைவுலகம் மீள்கொண் டீரே! 5

நிலவரணும் நீரரணுந் தாண்டிச் சென்றீர்!
நெஞ்சுருக நடை நடந்தீர்! வான் பறந்தீர்!
குலவரணும் மதவரணும் கடந்து நாட்டின்
கொடி மரத்தைக் காப்பதற்குப் பெரும்போ ரிட்டீர்!
புலவருளம் துடிதுடிக்க மொழிய ழுங்கப்
புறப்பட்டீர்! பொருதுகளஞ் செல்ல லானீர்!
‘நிலவுவரும்; காற்றுவரும்; வருவீர்’ என்றே
நின்றிருந்தோம்! வெற்றிவந்த தும்மை காணோம்! 6

பாக்கித்தானியர் கொட்டம்:

கரிபுகுந்த வயல்போலக் கழுகு பாய்ந்த
கவின்மாடத் திளம்புறாவின் குஞ்சைப் போல
நரிபுகுந்த சிறைக்கோழிக் கூட்டைப் போல
நாய்புகுந்த தனிவீட்டின் அடுக்க ளைபோல்
எரிபுகுந்த வைத்தூறு போலக் கோடி
எலிக்கூட்டம் குடிபுகுந்த நெற்சாலைப் போல்
பரிபுகுந்த கொல்லையைப்போல் பாக்கித் தானின்
படைபுகுந்த கீழ்வங்கஞ் சிதைந்த தம்மா! 7

குற்றுயிராய்க் குலையுயிராய்த் துடிக்கக் கொன்றார்!
கூட்டத்தின் உட்புகுந்து சிதைத்தார்! எங்கும்
சுற்றிவந்து தெருத்தெருவாய் மக்கள் தம்மைச்
சுட்டழித்தார், இடையிடையே கண்ணில் பட்ட
நெற்றிளமைக் கன்னியரைக் கற்ப பழித்தார்,
நிற்கவைத்தே உடைகளைந்து குலைக்க லானார்!
வற்றலிலாப் பெண்வேட்கை, மண்ணின் வேட்கை,
வஞ்சகருக் கென்வேட்கை மிஞ்சிற் றம்மா! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/161&oldid=1446227" இலிருந்து மீள்விக்கப்பட்டது