பக்கம்:கனிச்சாறு 7.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

இரைகடலை அடடா,இவ்
வெரியேற்றைத் தமிழ்நாடும்
இழந்த தம்மா! 3

எப்பொழுதும் எவ்விடத்தும்
எந்நேர மும்தொண்டோ டிணைந்த பேச்சு!
முப்பொழுதும் நடந்தநடை!
முழுஇரவும் விழித்தவிழி! முழங்கு கின்ற
அப்பழுக்கி லாதவுரை!
அரிமாவை அடக்குகின்ற அடங்காச் சீற்றம்!
எப்பொழுதோ, அடடா,இவ்
வேந்தனையித் தமிழ்நாடும் ஏந்தும் அம்மா? 4

பெற்றிழந்தோம், பெரியாரை!
பெற்றியிழந் தோம்! அவரின்
பெருந்த லைமை
உற்றிழந்தோம்; உணர்விழந்தோம்
உயிரிழந்தோம்; உருவிழந்தோம்!
உலையாத் துன்பால்
குற்றுயிராய்க் குலையுயிராய்க்
கிடக்கின்ற தமிழினத்தைக்
கொண்டு செல்லும்
நெற்றுமணித் தலைவரினை,
அடடா,இத் தமிழ்நாடும்
நெகிழ்த்த தம்மா! 5

பெரியரைப் பேசுகின்றோம்;
பெரியாரை வாழ்த்துகின்றோம்;
பீடு, தாங்கப்
பெரியாரைப் பாடுகின்றோம்;
பெரியார்நூல் கற்கின்றோம்;
பீற்றிக் கொள்வோம்!
உரியாரைப் போற்றுவதின்
அவருரைத்த பலவற்றுள்
ஒன்றை யேனும்
சரியாகக் கடைப் பிடித்தால்
அடடா, இத் தமிழ்நாடும்
சரியா தம்மா! 6

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/169&oldid=1446235" இலிருந்து மீள்விக்கப்பட்டது