பக்கம்:கனிச்சாறு 7.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

கலவல் தமிழ்க்கே தனித்தமிழ்காண் - ஒளி
காழ்க்கும் நினைவின் பாவாண!
பலவல் லின்பம் மறந்தாயே - நீ
பாயல் மறந்த போழ்தினிலே!

வேட்கும் தமிழே விளைவாகிச் - சொல்
விளைக்கும் தொழிலே வாழ்வாகித்
தோட்கும் துண்டைப் போர்த்தாமல்; ஒரு
துறவியைப் போலும் மனங்கொண்டே
நாட்கும் மணிக்கும் உழைப்பெடுத்தாய்! - யாம்
நலிந்தோம் மெலிந்தோம் செந்தமிழை
மீட்கும் முயல்வில் பாவாண - நீ
மீளாத் துயில்காண் போழ்தினிலே!

-1981




109

செந்தமிழை வென்றெடுத்த
சீரியலாளன் ஒளவை!



உரைவேந்தர் என்றுபுகழ்
ஒண்புலவர் ஒளவை
துரைசாமி தோன்றியபின்
அன்றோ - நரைவாரும்
தெள்ளுதமிழ் நூல்களெல்லாம்
தீந்தமிழாய்த் தித்திக்கக்
கொள்ளுமுயர் செம்பொருளைக்
கொண்டு!

ஆரியத்தால் வேய்ந்த
அழிவுரைகள் மாய்ந்தொழிய
வீரியத்தால் செந்தமிழை
வென்றெடுத்தார் - சீரியத்தால்
ஒளவை துரைசாமி

ஆய்ந்துபல நூலுரைகள்
செவ்வியவாய் நேரியவாய்ச்
செய்து!

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/191&oldid=1446987" இலிருந்து மீள்விக்கப்பட்டது