பக்கம்:கனிச்சாறு 7.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  151


தமிழ்மொழி உள்ள வரையிலும் வாழ்வீர்!
தமிழினம் வாழ்கின்ற வரையிலும் வாழ்வீர்!
இமிழ்கடல் உலகில் இயங்குதொழி லாளர்
ஏற்றம் எங்குண்டோ அங்கெலாம் வாழ்வீர்!
கமழ்தரும் தூய்தமிழ்க் கருத்திலே வாழ்வீர்!
கடமை, ஒழுக்கம், உண்மையில் வாழ்வீர்!
அமிழ்வுறா நேர்மையில் ஆண்மையில் வாழ்வீர்!
அன்னைக் குலத்தினர் அருளில் வாழ் வீரே!

-1982

 


113

ஆறு. அழகப்பன்


 
ஆறு அழகப்பன் அன்புத் தமிழுள்ளம்
மாறு கொளலின்றி மாண்தமிழை நாள்தோறும்
வீறு கொளமுழக்கி வியன்நா டகம்வளர்த்துத்
தேறு தமிழறிஞர் தேறுமொரு காவலனாய்
நின்று நெடும்புகழும் நேரில்லா நல்வளமும்
என்றென்றும் வாழும் எழில்பெயரும் பெற்றுயர்ந்து
குன்றுபோல் வான்போல் கோலக் கதிரவன்போல்
பொன்றாது வாழ்க பொலிந்து!

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/196&oldid=1446994" இலிருந்து மீள்விக்கப்பட்டது