பக்கம்:கனிச்சாறு 7.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


129

மன்சூர் அலிகான் என்னும்
மாவீரத் திரைக் கலைஞன்
மன்னு ‘தமிழாகரன்’ ஆகுக!


முன்சேர் ஒலி வெளிப்பட்டு
முத்துறையாய் ஒளிர்ந்ததமிழ்
மூவேந்தர் காத்திடவே
முப்பொழுதும் வாழ்ந்திருந்து
பின்சேர்ந்த ஆரியத்தால்
பிணியுண்டே ஒளிகுறைந்து
பீடழிய நின்றநிலை
பெயர்த்தெடுத்து மீட்டெடுக்கும்
வன்சேர்புல மக்கள்பலர்
வரிசையிலே கலைத்துறையில்
வந்துநிற்கும் உணர்வாளன்
வளர்தமிழ்க்கு நற்காவலன்
‘மன்சூர் அலி கான்’ என்னும்
மாவீரத் திரைக் கலைஞன்
மன்னு ‘தமிழ் ஆகரன்’ ஆய்
மக்கள்மனம் வாழ்ந்திடுக!

- 1994


130

மல்லிகேசன் எனும்
மனம் செயல் தூய்மையர்!


அமெரிக்க புரூக்ளின் அருமருத்துவ மனைபோல்
நம்தமிழ் நாட்டிலும் சென்னையில் நாட்டிய
இராமச் சந்திரா மருத்துவ மனையுள்
திராவிட மருத்துவர் தென்மொழி அன்பர்
மல்லிகே சன்எனும் மனம்செயல் தூய்மையர்
வல்லிதின் அழைத்து வாய்ப்புகள் அருளிப்
பண்டுவஞ் செய்து பாடுநோய் ஆற்றிய
தொண்டரும் சிறப்புயிர் துறப்பினும் மறவேம்!

-1995
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/215&oldid=1447031" இலிருந்து மீள்விக்கப்பட்டது