பக்கம்:கனிச்சாறு 7.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உக


2. எதிலும் வெளிவராத பாடல். பழைய கோப்பிலிருந்து எடுக்கப்பெற்றது. வடசொற்கள் களையாது வெளியிடப் பெறுகிறது.

3. ஐயாவின் பள்ளி, கல்லூரி நண்பர் ஒருவர், மிகவும் ஏழ்மையான நிலையில் ஐயாவுடன் படித்தார். உணவுண்ணவும் இயலாதநிலை அவருக்கு. எனவே ஐயா தாம் எடுத்துப் படித்த தனியறையொன்றிலேயே அவரையும் தங்கச்செய்து, வீட்டிலிருந்து தமக்கெனக் கொணரும் உணவை அவர்க்கும் பகிர்ந்தளித்து, அவரையும் அவர் கல்வியையும் பேணினார். அவரின் இனிய நட்பை எதனினும் மேலாகக் கருதி பின்னர் எழுதிய பாடல் இது.

4. புலவரின் வறுமைச் சூழலில் இருளின் அணைப்பு.

5. தூய்மையான உள்ளங்களுக்கிடையில்தான் மகிழ்ச்சி பெற முடியும். அத்தகைய தூய்மையான உள்ளங்கள் நிறைந்த இடத்திற்கே, நெஞ்சே, ‘என்னை அழைத்துச் செல்’ என்று உள்ளத்தை வேண்டுவதாக அமைந்த பாடல் இது.

6. ஆசிரியரின் உயிர்க் கொள்கை இங்கு மூச்சு விடுகிறது.

7.அச்சில் ஏறாத பாடல். பள்ளியில் பயிலும்போது கல்வியோடு, பண்பையும் பெற்றுக்கொள்வதுடன், அதை எவ்வாறு நோக்கவேண்டும் என்பதைப் பாவலரேறு தாம் பெற்றவற்றைக் கூறுவதன்வழி உணர்த்துவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

8. சென்னைக்கு முதன்முதல் வந்தபோதிருந்த தன் உள்ளத்துணர்வை பாவலரேறு அப்படியே படம் பிடித்திருக்கிறார் இப்பாடலில். கண்ணுக்கும், கருத்திற்கும் இன்பம் சேர்க்கும் எதனையும் கவினுள்ள இந்நகரத்தினிலே காணேன் என்று கூறுகிறார் பாவலரேறு.

9. வாய்மை நெஞ்சத்திலும், தூய்மை நிகழ்விலுமான தாய்மையர்க்குத் தாம் தலை தாழ்த்துவமே என்றுரைக்கின்றார் பாவலரேறு.

10. புரட்சிப் பாவலர் பாரதிதாசனாரின்மீது பேரன்பு கொண்டு, அவர்தம் பாத்திறம் வியந்து பாவலரேறு அவர்களால் பாடப்பெற்ற பாடல்.

11. தன் எழுத்துகளினால் இக்குமுக மாற்றப்பயன் ஏற்படுமோ என்று எண்ணிப்பார்த்துக் கொண்டிராமல் தொடர்ந்து எழுதி எழுதிச் சென்று கொண்டிருக்கிறேனே... என்று இப்பாடலில் பாவலரேறு அவர்களின் உள்ளம் அழுகிறது.

12. ஐயாவின் நண்பர் ஒருவர் ஒருநாள், “எனக்குப் பாவலர்களைவிட எழுத்தாளர்களுக்கே அதிகப்படியான புகழ் உண்டு என்ற நம்பிக்கை. ஆதலின் இறந்தபின் புகழப்படும் பாவலர்களைவிட இருக்கும்போதே புகழப்படுகின்ற உரைநடை எழுத்தாளர்களுக்கும், சொற்பொழிவாளர்க்குமே உயர்ந்த நிலை ஏற்படும்” என்றார். அப்பொழுது பாவலரேறு ஐயா எழுதிய இப்பாடல் உலக அறிவு நிலையையும், அதில் பாவலர்களின் உயர்வையும் ஒருவாறு விளக்குகிறது.

13. தென்மொழி தொடங்கப்பெற்று இடை நின்ற பொழுது, ஆசிரியரின் உணர்வுப் போக்கு ஏற்ற வடிகால் இன்மையால் மிகவும் குமைந்து வருந்திக் கிடந்தது. அதுபற்றி அன்பர் ஒருவர்க்கு எழுதிய பாடல் இது.

14. 1961-இல் தென்மொழி தொடர்ந்து வெளிவர இயலாமல் இடைநின்ற போழ்திருந்த கடும் பொருளியல் நெருக்கடிக்குத் துணையாய்த் தொகை அனுப்புவதாய்ச் சொல்லிச் சென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/22&oldid=1445486" இலிருந்து மீள்விக்கப்பட்டது