பக்கம்:கனிச்சாறு 7.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 ☐ கனிச்சாறு - ஏழாம் தொகுதி

ஏறிவரும் பேரிழிவை எள்ளின்மூக் கத்துணையும்
எண்ணித் துடைத்திடவே எவ்வழியும் கண்டறியோம்!
மண்ணில் தமிழினத்தின் மாண்பைப் புதுக்குகிலோம்!

இந்நிலையை வீழ்த்தி இறுதிநிலை கண்டிடவும்
தந்நிலையை முன்போல் தமிழர்க்குத் தந்திடவும்
பாவாணர் மன்றம் பிறந்ததெனில் மாறில்லை!
காவாத செந்தமிழும் காக்கப் பெறுமினியே!

நந்தமிழ்க்குத் தொண்டுசெய்யும் நற்றமிழர் மன்றமிதே!
எந்தமிழைக் காக்க எழுந்த தமிழ்மன்றம்!
ஆகவே பாவாணர் மன்றம் அணிபெறுக!
ஈகைப் பெரும்பணியால் இம்மன்றம் தொண்டாற்றி
அன்றன்றும் செந்தமிழ்போல் ஆன்ற புகழ்பெற்றே 40
என்றென்றும் வாழ்க இனிது!

-1968
 

141

பொங்கல் நினைவு!

அன்புத் தம்பியே!
அருமைத் தங்கையே!
இன்பப் பொங்கலை
எண்ணிப் பார்க்கையில்,
துன்புறும் மக்கள், என்
நினைவில் தோன்றலால்
தென்பில் குறைகிறேன்;
அறிவில் திகைக்கிறேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/227&oldid=1447069" இலிருந்து மீள்விக்கப்பட்டது