பக்கம்:கனிச்சாறு 7.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  197


155

அ.தெ. தமிழநம்பி - மலர்க்கொடி.


தமிழ நம்பி!
எமை, உயிர்ப் பிக்கும் இனிய உளங்களில்
ஒன்று, தமிழ நம்பியின் உள்ளம்!
என்றும் தமிழ்நலம் பேணி இயல்வது!

எமக்குத் துணையாய் இறைவன் அனுப்பிய
ரண்டோர் உயிர்களுள் இவருயிர் ஒன்று!

எண்ணிய வுடன், உயிர் இனிக்கும் ஒளிமுகம்!
தண்ணிய பணிவுரை! தவறிலா நன்னடை!
இத்தகு நல்லுயிர்க் கில்லறத் துணையாய்
ஒத்த மலர்க்கொடி ஒன்று வாய்த்தது!

மலர்க்கொடி தானும் மணித்தமிழ நம்பியும்
பலர்க்கொரு காட்டென இல்லறம் பயிலுக!

எந்தமிழ் பேணுக! னநலங் கருதுக!
செந்தமிழ் நாட்டை விடுதலை செய்யுந்
தடந்தோள் மறவரை ஈன்றுபுறந் தருக!
பொருந்திய பன்னலம் பொலிய
அருந்தவ நெஞ்சால் அமைய வாழ்த்துதுமே!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/242&oldid=1447115" இலிருந்து மீள்விக்கப்பட்டது