பக்கம்:கனிச்சாறு 7.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  199


157

முத்தையன் - அரசிறைவி.


அதிர்தமிழ் நந்நாவால் ஆய்ந்ததமிழ் காக்கும்
கதிர்தமிழ் வாணன் களிப்போ,டெதிர்தாங்கி
அன்பிளவல் முத்தையன் ஆன்ற அரசிறைவிக்
கின்பமணம் கொண்டார் இனிது!

கொண்டவர் வாழ்த்துதும் கொண்டவர் வாழ்த்துதும்
உண்டவர்க் கின்னலம் ஊற்றாய்ப் பெருக்குமெஞ்
செந்தமிழ் உள்ளுயிர்த்த லால்!

உற்றவர் வாழ்த்துதும் உற்றவர் வாழ்த்துதும்
கற்றவர்க் கின்பம் கனியப் பொழிவிக்கும்
நற்றமிழ் உள்ளியங்க லால்!

சேர்ந்தவர் வாழ்த்துதும் சேர்ந்தவர் வாழ்த்துதும்
சோர்ந்தவர் நெஞ்சையும் சோரா துயிர்ப்பிக்கும்
பூந்தமிழ் ஆங்கிருத்த லால்.

-1976
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/244&oldid=1447117" இலிருந்து மீள்விக்கப்பட்டது