பக்கம்:கனிச்சாறு 7.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

ஙஎ


188. மலேசியப் பாவலர் பொன். அன்பரசன் அவர்களின் ‘உதிரிப்பூக்கள்’ எனும் பாடல் தொகுப்பு நூலுக்குப் பாவலரேறு ஐயா அவர்களின் மதிப்புரைப் பாடல்.

189. அந்தமான் முரசு - மாத இதழாகத் தொடங்கப்பெற்று பின் கிழமை இதழாக வருகின்ற முயற்சிக்கும் அதன் ஆசிரியர் சுப. சுப்பிரமணியனார்க்கும் பாவலரேறு ஐயா அவர்களின் வாழ்த்துப்பா.

190. ‘கவிதை’– எனும் தலைப்பில் ‘தெசிணி’ என்பார் பத்தொன்பது ஆண்டுகளாய்த் தொடர்ந்து இதழ் நடத்தி வந்ததையும் அவ்விதழ் இருபதாம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதையும் வாழ்த்திப் பாவலரேறு எழுதிய வாழ்த்துப்பாடல்.

191. திருக்குறளுக்குப் பொருளுரையை எளிய பாடல்களின் வடிவிலேயே உருவாக்கிக் ‘குறளும் பொருளும்’ என்னும் தலைப்பில் வெளியிட முனைந்த பாவலர் இறையரசன் அவர்களின் முயற்சியை வாழ்த்திப் பாவலரேறு எழுதிய வாழ்த்துப்பாடல்.

192. ‘தமிழ் நிலம்’ இதழின் முகப்புப் பாடல்!

193. பாவலர் கடவூர் ப. மணிமாறன் அவர்களின் முதல் முயற்சியாக அவரின் பாடல் தொகுப்பு நூல் ‘எதிர்நீச்சல்’ எனும் பெயரில் வெளிவந்தது. அதற்குப் பாவலரேறு ஐயா அவர்கள் அளித்த வாழ்த்துப்பா.

194. பாவலர் கடவூர் ப. மணிமாறன் அவர்களின் இரண்டாவது பாடல் தொகுப்பு ‘விடியல் விதைகள்’ நூலுக்குப் பாவலரேறு எழுதிய அனுப்பிய வாழ்த்துப்பா.

195. புலவர் செல்லத்துரை நூலுக்கு வாழ்த்து! புலவர் அருள் செல்லத்துரை அவர்களின் ‘ஏசுபிரான் பிள்ளைத்தமிழ்’ நூலுக்கு ஐயா அவர்கள் எழுதிய வாழ்த்துப்பாடல்.

196. பாசறை மணிகண்டனின் பாடல் நூல் ‘கூட்டுக்குயில் பாட்டுக்குரல்’ என்னும் நூலுக்குப் பாவலரேறு தந்த மதிப்புரை.

197. அன்புத் தமிழுளம் கொண்டடோரய்ப் பாவலரேறு மதித்திட்ட பாவலர் எழில்வாணன் அவர்களின் ‘ஒரு சொட்டுக் கண்ணீர்’ நூலுக்குப் பாவலரேறுவின் அணிந்துரை.

198.சின்னத் தாராபுரம் பாவலர் இறையரசனின் ‘சிந்தனை ஊற்று’ பாடல் நூலிலிருந்து பல்சுவைவிருந்து உண்டதாகப் பாராட்டுப்பா எழுதி அளித்தார் பாவலரேறு.

199 . வெங்காலூர்ப் பாவலர் வில்வநாதனின் பாடல் நூலான ‘பூங்கொத்து’ என்னும் நூலுக்குப் பாவலரேறு எழுதி அளித்த வாழ்த்துப்பா!

200, பாவலர் தமிழியக்கன் அவர்களின் ‘அறிவியல் இலக்கியம்’ எனும் நூல் எட்டாத அறிவியலை எடுத்தளித்த நல்விளக்க நூலெனப் பாவலரேறு அணிந்துரை அளித்துள்ள பாடல்.

201.தென்மொழிப் பாவலர் கடவூர் ப. மணிமாறன் அவர்களின் பாடல் தொகுப்பு ‘சிவப்புமலர்கள்’ ஒரு நிலைத்த தமிழினத்தின் தேடல் – என்பதாக வாழ்த்துப்பா அளித்துள்ளார் பாவலரேறு.

202. பாவலர் தெசிணி அவர்களின் கவிதை – இதழ் இருபத்தைந்தாம் ஆண்டின் நுழைவுக்காகப் பாவலரேறு எழுதிய வாழ்த்துப்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/38&oldid=1446000" இலிருந்து மீள்விக்கப்பட்டது