பக்கம்:கனிச்சாறு 7.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  11

சிட்டுக் குருவியைப் போல உரிமையும்
சிற்றெறும்பின் ஒழுங்கும்,ஒரு
சேரக் கற்றேன்! பெரும் இன்பம்பெற்றேன், இந்தச்
சுற்றுச் சுவர்களுக் குள்!
பட்டுப் புழுதரு நற்பயன் போல், உளப்
பாங்குறும் நூற்பயனும்,இந்தப்
பார்தனி லுள்ளவர் யாவரும் ஒன்றெனும்,
பண்பதும் இங்குக் கற்றேன்!
எட்டுணை மேலவர் ஆயினும் கற்கிலார்
என்றும் இழிந்த வரே! நிலை
எத்துணைத் தாழ்ந்தவர் ஆயினும் கற்றவர்
யாண்டும் உயர்ந்த வரே!
நட்டுவைத்த விதை நற்பயன் காண்டலை
நல்ல தொரு விளைவை, இந்த
நானிலம் வாழ்த்தும்! அறம்வளர்க்கும் என்றன்
நற்பள்ளி வாழிய வே!

1955




8  சென்னை சென்றேன்...!


“அருந்துகின்ற பொருளிலரை உண்ணுகின்ற
அரும்பொருளிற் பாதியெனக் கூறிநின்றும்
மருந்தெனினும் மறைக்காமல் மறுக்கா...
மரபினஎந் தமிழரது பண்டைக்காலம்!
விருந்தென்றாற் காதவழி யோடுகின்ற
வெறுஞ் சொல்லில் வல்லார்வாழ் கின்றா”ரென்றே
இருந்துவந்தேன், 'இல்லை'யெனக் கூறிநெஞ்சில்
இடம்பெற்றோர் வழியனுப்பச் சென்னை சென்றேன்.

விஞ்சுகின்ற அன்பை யள்ளி வீசுகின்ற
வாயெல்லா மென்பெயரே யொலிக்கும் அன்பால்
கெஞ்சுகின்ற கண்களில்நான் நிற்பேன் என்றும்
கிளர்த்துகின்ற சொல்லிலெல்லாம் ஒலிநான், நண்பர்

-1955
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/56&oldid=1441921" இலிருந்து மீள்விக்கப்பட்டது