பக்கம்:கனிச்சாறு 7.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  33


21

எனக்குக் குழந்தைதான்;
இருப்பினும் அவள் தாய்!


எனக்குக் குழந்தையாய்
இருந்தவள், இவள்தான்!
என்னிரு தோளினில்
வளர்ந்தவள், இவள்தான்!
தனக்குப் பிறந்தது - எனக்கூறி, ஒருநாள்
தாமரை மொக்கொன்றை
என்மடி யிட்டாள் - உவந்
திட்டாள் - ஒரு
தாயெனத் தனைக்கூறி விட்டாள்!

குதலை மொழியினைச்
சிதர்ந்தவள், இவள்தான்!
கொஞ்சியென் நெஞ்சில்
கிடந்தவள், இவள்தான்!
மதலை பிறந்தது - எனக்கூறி, ஒருநாள்
மணிப்புறாக் குஞ்சொன்றை
என்கையில் தந்தாள்
மகிழ்ந்தாள் - ஒரு
மகவுக்குத் தாயென் றுவந்தாள்!

தாயின் அணைப்பினில்
உறங்கியவள், இவள்தான்!
தந்தையென் முதுகினில்
புதைந்தவள், இவள்தான்!
சேயொன்று பிறந்தது எனக்கூறி ஒருநாள்
செம்மா துளையொன்றை
கைகளில் வைத்தாள்
சுவைத்தாள் - நான்
சேயில்லை; தாயென் றுரைத்தாள்!

பாடிடுங் குயில்; இவள்
பசும்பச்சை மயில்தான்!
பாடகச் சீரடி
தடுமாறுங் கால்தான்!
ஆடி யசைந்திட வந்தனள், ஒருநாள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/78&oldid=1446049" இலிருந்து மீள்விக்கப்பட்டது