பக்கம்:கனிச்சாறு 7.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  35

என்றன் பாட்டே நிலைக்கும் பாட்டு!
எல்லாப் பாட்டும்
உலகுடைமை!
என்றன் பாட்டே புதுமைப் பாட்டு!
எல்லாப் பாட்டும்
பொது வுடைமை!

1972


23

நானும் பழையவன்! எண்ணமும் பழையது!


என்னை நினைத்தேன்
எண்ணம் வந்தது!
வந்த எண்ணம்
எழுத்தாய் வடிந்தது!
வடிந்த எழுத்தைத்
தாளில் வாங்கினேன்!
வாங்கிய தாள்களை
வடித்தனர் அச்சில்!
அச்சில் வடித்ததைப்
பொத்தகம் ஆக்கினர்!
ஆக்கிய பொத்தகம்
அனைவரும் வாங்கினர்!
வாங்கிய அனைவரும்
வழியில் தொலைத்தனர்!
தொலைந்த பொத்தகம்
அலையாய் அலைந்தது!
அலைந்தபின் ஒருநாள்
என்னை அடைந்தது!
அடைந்தது புதிதென
ஆசையாய்ப் படித்தேன்!
படித்தது மீண்டும்
என்னுள் பதிந்தது!
பதிந்தது ஒருநாள்
பழைய படியே,
என்னை நினைக்கையில்
எண்ணமாய் வந்ததே!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/80&oldid=1446052" இலிருந்து மீள்விக்கப்பட்டது