பக்கம்:கனிச்சாறு 7.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


31

உறவாடிய பழைய ஊர் நினைவு!


இங்குவிளை யாடினேன்;
இவ்வெளியில் தூங்கினேன்;
இம்மணலைத் தோண்டி, ஊற்று
நீரைக் குடித்தேன்!
சங்குகிளிஞ் சில்களைத்
தள்ளும் அலைநீரிலே
கால்நனைந்தே, ஈரமணல்
அப்பி மகிழ்ந்தேன்!

இந்தமரத் தின்னிளநீர்
வாய்நிரம்ப மண்டினேன்;
இம்மரத்தின் ஈச்சம்பழம்
வாய்கு தப்பினேன்!
சொந்தமெனப் புல்வெளியில்
பாறையின்மேல் ஓடினேன்;
சிந்திசைத்தேன்; தெம்மாங்கிலோர்
பாட்டுப் பாடினேன்!

மூர்த்திக்குப்பம் குப்பம்மாளின்
திண்ணையில்நான் சோறுண்டேன்;
முழுநிலவில் தென்னங்கீற்றில்
படுத்துத் தூங்கினேன்!
ஊர்த்தெருவில் குடும்பத்தோடு
உலாக்கள்வரச் சுற்றினேன்;
ஓங்கியுள்ள ஆலமரத்
தூஞ்சல் ஆடினேன்!

குறள்பெருமாள் வாய்துவைந்த
கொஞ்சுதமிழ் மாந்தினேன்;
குழந்தைபோல இளம்பனங்காய்
நுங்கை முங்கினேன்;
விரலளவில் சுட்டெடுத்த
முந்திரிப்ப ருப்புகளைக்
குப்பெடுத்துப் பெருமாள்தரத்
தின்று மகிழ்ந்தேன்!
நண்பருடன் பெண்ணையாற்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/89&oldid=1446063" இலிருந்து மீள்விக்கப்பட்டது