பக்கம்:கனிச்சாறு 8.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


(ஞானச் செல்வனாரின் பாத் தருக்கம்)
(மறு சுற்று தலைவர்களுக்கு மட்டும்)


ஈரணி அறுவர் பாங்கும்
ஒரு சுற்று முடிந்த திங்கு;
யாரணி சிறந்த திங்கே?
எவரணி வென்ற, தென்றே
ஓரணி யான தீர்ப்பை
உரைக்குமுன் இன்னோர் சுற்று.
நேரணித் தலைவர் மட்டும்
நின்றிங்குப் பொருதக் காண்போம்!

மன்றத்தே வீற்றி ருக்கும்
மணித்தமிழ் நெஞ்சம் யாவும்
நன்றவர் கருத்தைக் கேட்பீர்!
நடுநிலை உள்ளத் தோடு,
வென்றவர் யாவர் என்றே
விளக்கமுற் றிருப்பீர்! வாழ்ந்து
சென்றவர் பெருமை யாவும்
செந்தமிழ்ப் பெருமை யன்றோ?

முன்னவர் பால சுந்தரம்
முதலணிக் கருத்தைப் பாவால்
சொன்னநற் கருத்தை யெல்லாம்
தொகுத்துரைத் தின்னுஞ் சொல்வார்!
பின்னணிக் கருத்தை யெல்லாம்
பேசுவார் கோவைச் சேரல்!
இன்னவர் முடிந்த பின்னர்
என்தீர்ப்பை வைப்பேன் இங்கே!

(கோவை இளஞ்சேனுக்கு அழைப்பு)


கோவை இளஞ்சேரன் கொள்கை தொகுத்துரைக்க
மேவுகயிம் மேடை மிசை!

(பாலசுந்தரனார்க்கு அழைப்பு)


இன்பால சுந்தரனார் ஏற்கும் திரள்கருத்தை
முன்பாக வந்து முழங்கிடவே - அன்பால்
அழைக்கின்றேன் ஈங்கவரை; ஆங்கவர்க்குப் பின்னர்யான்
இழைக்கின்றேன் தீர்ப்பை எடுத்து!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/108&oldid=1448122" இலிருந்து மீள்விக்கப்பட்டது