பக்கம்:கனிச்சாறு 8.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98  கனிச்சாறு - எட்டாம் தொகுதி

தமிழ்நாட்டின் அரசியலில்
தக்கதிறங் காட்டிநலம் சேர்த்தார் அன்னார்
தமிழருக்குத் திரு.வி.க.
கலங்கரையின் திருவிளக்கு! ஒளிவிளக்கு!
தமிழ்மனத்தால் பொதுத்தொண்டில்
தமைநனைத்துக் கொண்டவர்தாம் தமிழின் தென்றல்!

பயனுற முடிந்த பாப்பட்டி மன்றினை
நயனுறு வகையில் நடத்திய இயற்றமிழ்ப்
பயிற்றகத் தார்க்கும் - அதைப் - பயிற்றுறும் ஆசான்
குயிற்றமிழ்ப் புலவன் சரவணத் தமிழர்க்கும்
பாத்திறத் தோடு பட்டி மன்றினில்
நாத்திறம் நாட்டிய நற்புல வோர்க்கும்,
விருந்துத் தமிழை விழுமிய அமைவோ(டு)
இருந்து கேட்ட உங்கள் எல்லார்க்கும்
அன்புற நன்றியும் அமைவுற வணக்கமும்
இன்புறக் கூறி இதனை முடிப்பேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/112&oldid=1448446" இலிருந்து மீள்விக்கப்பட்டது