பக்கம்:கனிச்சாறு 8.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


“நாட்டினிலே குடியரசை நாட்டிவிட்டோம் இந்நாள்! .
நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்!
காட்டோமே சாதிமணம்! கலப்புமணம் ஒன்றே!
நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி!
ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே!
உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்!
கேட்டையினி விலைகொடுத்து வாங்கோமே; சாதி

கீழ்மேல்என் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே!

(வேறு)


குடும்பநலத் திட்டம் கொள்கை வராதமுன்
இடும்பை தவிர முதற்குரல் எடுத்தவன்
புரட்சிப் பாவலன் புதுமைப் பாவலனே!

காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?
சாதலுக்கோ பிள்ளை? அன்றித் தவிப்பதற்கோ பிள்ளை?

சந்தான முறைநன்று! தவிர்க்கும்முறை தீதோ?


2. விடுதலைக்குரல்

மொழிவிடு தலையும் இனவிடு தலையும்
பழியிலாப் பாவலர் விரும்பிய கொள்கை!
நாட்டு விடுதலையும் நன்றென மொழிந்தார்!
வாட்டு ஆரியத்தினும் வடவர்சூழ்ச் சியினும்
தமிழக மக்கள் தப்பிட வேண்டில்
தமிழகம் பிரிதலும் தக்கதே என்றார்!

(வேறு)


“விடுதலை பெறுவது முதல் வேலை!
அடி மையில் உழல்வது முடியாது!

விழிதுயில் வதுமிகு தவறாகும்! - எழுவீரே!”


- என்று எழுச்சி பாடினார்.

“செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!”

“எரிகின்ற எங்களின் நெஞ்சுமேல் ஆணை!

இனியெங்கள் ஆட்சியிந் நாட்டி லே!”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/166&oldid=1448567" இலிருந்து மீள்விக்கப்பட்டது