பக்கம்:கனிச்சாறு 8.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  159


“தமிழென்ற உணர்வினைக் குவியடா யார்க்கும்
தமிழருக் கிங்குள்ள குறையெலாம் தீர்க்கும்”

“தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்
தாய்தடுத்தாலும் விடேன்!
எமை நத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!”

“உயர்தமிழ்,உயர்நடை, உயர்தனி வீரம்
இங்கிவை தமிழரின் உடைமை”

“பண்டிருந்த தமிழர் மேன்மை
பழுதாக முழுதுமே
கண்டிருந்தும் குகையிற் புலிபோல்
கண்ணுறக்கம் ஏனோ?”

“தனி உலகை ஆண்டனை முன்னாள்
தன்மானம் இழந்திடாதே இந்நாள்!”

“சின்ன நினைப்புகள் தன்மானமற்ற
செயல்களை இனிவிட்டு வையோம்"

“தமிழனுக்கு வீழ்ச்சியில்லை; தமிழன்சீர்த்தி
தாழ்வதில்லை! தமிழ்நாடு, தமிழ மக்கள்
தமிழ்என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்த தில்லை.”

(வேறு)


“இனமான திராவிடர் பண்பின்
எழில்காண உணர்வுவிளக் கேற்று!”
“தமிழ் எங்கள் உயிரென்ப தாலே வெல்லுந்

தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே!”

(வேறு)



உன் மறத்தனம் எங்கே?

“கைவிரித்து வந்த கயவர் நம்மிடைப்
பொய்விரித்து நம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பாரெனில்

வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?”


தமிழனுக்கெதிரான ஆட்சி நிலைக்காது.

“தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி

சற்றும் நிலைக்காது மாளும்”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/173&oldid=1448580" இலிருந்து மீள்விக்கப்பட்டது