பக்கம்:கனிச்சாறு 8.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 35


இனிமை:

இனிமை என்பது தமிழின் மறுபெயர்
“இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு
இன்பந் தரும்படி வாய்த்தநல் அமுது.”


- என்பார் பாவேந்தர்.
இன்பத் “தமிழ்போல் இனிதாவ தெங்கும்
காணோம்” என்பார் பாவலர் பாரதி!
தனிப்பால் கசக்குமோ? புளிக்குமோ தனித்தேன்!
தனித்தமிழ் அவைபோல் தருவது இனிமையே!
தனித்தமிழ் புளிப்பெனல் நாவினது தவறே!
ஒன்றால் அவன்நா ஒருமொழிக் கடிமை!
அன்றால் அவனுடை மனமயக் காகும்!
அதுவும் இல்லெனின் அறிவுச் செருக்கால்
புதுவது நயக்கும் புன்மையால் மொழிவான்!
மொழி இனிமையா? பாஷை,லாங் வேஜா?
முதுமை இனிமையா? வயோதியம் சுவையா?
மனைவியா தாரமா? மங்கையா ஸ்திரியா?
 நாம் தேயமா?‘நேமா’ பெயரா?
உறவு இனிமையா? பந்துகள் வேண்டுமா?
அறமன் றம்மா? நியாய ஸ்தலமா?
இளமை இனிமையா? யௌவனம், யூத்தா?
குளிர்ந்த நீரா? தூத்தமா? ஜலமா?
உலகியல் இனிமையா, லோகா யதமா?
கலைமகள் இருக்கையா, சாரதா பீடமா?
மந்தமா ருதமா? நல்லிளந் தென்றலா?
அந்தமா, முடிவா? ஆதியா முதலா?
அங்கயற் கண்ணியா; மீனலோ சனியா?
பங்கஜம் பத்மமா? தாமரை முளரியா?
ஜனநா யகமா, மக்க ளாட்சியா?
மனம், உளம்
இனிமையா? ஹிருதயம் நன்றா?
ராஜாதி ராஜனா, மன்னர் மன்னனா?
ஜேஷ்ட புத்திரனா, மூத்த மகனா?
பேறு
இனிமையா? பிரஸவம் இனிமையா?
விவாஹக் கிரமமா? திருமண முறையா?
வேண்டு கோளா, விக்ஞா பனமா?
விஜயமா வருகையா? விருக்ஷமா மரமா?
புஜமா தோளா? புஷ்பமா மலரா?
மயூரமா மயிலா? மார்க்கமா நெறியா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/49&oldid=1447665" இலிருந்து மீள்விக்கப்பட்டது