பக்கம்:கனிச்சாறு 8.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


‘எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமையெலாம்

எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!’


என்றே உரிமைப் பட்டையம் எழுதுவார்!

‘இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
இலேசுவழி ஒன்றுண்டு; பெண்களை ஆடவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்,

தாய்மையினை இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா?


பாவேந்தர் காட்டிய பொதுமை வழியிது!
தீண்டாமை பற்றிப் பாவலர் சாற்றுவார்.

‘அற்பத் தீண்டாதார் என்னும் அவரும் பிறரும் ஓர்தாய்
கர்ப்பத்தில் வந்தா ரன்றோ? - சகியே (கர்ப்பத்தில்)
பொற்புடை முல்லைக் கொத்தில் புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படி யார் நம்புவார்? - சகியே (சொற்படி)

ஏகபரம் பொருள் என்பதை நோக்க எல்லாரும்

உடன் பிறப்பே - ஒரு

பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதிலே உள்ள

தோ சிறப்பே?’


எப்படி அரசியல் இருக்க வேண்டுமாம்.

‘ஒப்பிட எவர்க்கும் ஒருவீடு, ஒருநிலம்
ஒருதொழில் ஓர்ஏர் உழவு மாடுகள்’


என்னும் சமநிலை எய்த வேண்டுமாம்!
பின்னும் பாவலர் கனல்எழப் பேசுவார்:

‘ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்.’
‘எல்லார்க்கும் எல்லாம் என்றிருப் பதான

இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்!’


என்று பொதுமைக்கு முத்தாய்ப்பு இடுவார்!
ஒன்று மட்டில் உண்மையென் றறிவீர்!
உலகப் பாவலர்க் குண்டான சிறப்புக்கும்
கழகப் புலவர்பால் காணும் பெருமைக்கும்
மேலாம் இவர்க்கொரு மேன்மை இருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/88&oldid=1448085" இலிருந்து மீள்விக்கப்பட்டது