பக்கம்:கனியமுது.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஆங்கிலம் பேசும் அழகுத் திரைப்படத்தைப்
பாங்குடன் கண்டு, பரிந்துரைத்தார் நண்பர்.
விருப்போடு வேண்டியதால் சின்னாள் முன் சென்றேன்.
சிரிப்பினை மூட்டியே, சிந்தனைக்கும் நல்விருந்தாய்
நேர்ந்தது, மேனாட்டார் நேர்த்திமிகு வாழ்வுரைக்கத்
தேர்ந்த சிறந்தகதை; சீராம் கருத்துக்கள்!

பெண்டிர் பலமணம் பெற்றிடும் கொள் கையங்கு
உண்டென்ப தால்அஃது உணர்த்துங் கதையெனினும்
வெற்று நகைச்சுவை வீணாம் எனக்கருதி,

மற்றொரு நற்கருத்தும் மாண்போடு தந்தனரே!

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/104&oldid=1380100" இலிருந்து மீள்விக்கப்பட்டது