பக்கம்:கனியமுது.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

எளிய குடும்பத்தின் ஏழையாம் தந்தை,
துளியும் விரும்பார் தூய்மையற்ற செல்வத்தை;
பாதகத்தின் வேராயும், பாவத்தின் தூராயும்
தீதளிக்கும், நல்ல திறனழிக்கும் நாணயங்கள்
தேடி அலையாமல் சிந்தை நிறைபவராம்!

நாடுபோற்றும் அந்த நற்குணத் தந்தையின்
தத்துவம் அத்தனையும் தாங்கும் திடசித்தம்
மொத்தமாய்ப்பெற்றவொரு மோகனப் பெண்மடவான்
இன்பக் களஞ்சியமாய், ஏழ்மை நிலைவிரும்பி,
அன்பின் உருவாய், அழகியாய் வந்தவளைக்
கண்டான் எழில்காளை! காதல் உருவாக்கிக்
கொண்டாட எண்ணினான்! கூடுதற்கும் என்ன தடை?

ஒருநாள் இருவருமாய் உந்துவண்டி மீதேறி

ஊர்சுற்றி வந்தார்; ஒருவன் எதிர்ப்பட்டான் ?

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/108&oldid=1380131" இலிருந்து மீள்விக்கப்பட்டது