பக்கம்:கனியமுது.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

எளிய உடை, தோற்றம், நடை யாவும்
இளைஞனவன் படிப்பாளி, இலட்சியம் கொண்டோன்
அவன் மீது மோடார் சேற்றை இறைத்தது
அவனோ அதற்காக ஆத்திரமும் கொள்ளாது
இனிய முகத்துடனே இருந்ததனைக் கண்டாள்.
இவனே எனக்கேற்ற மணவாளன்
எளிய வாழ்க்கையினில் திளைத்திடலா மென்று
வலிந்தவனைச் சந்தித்து மணம் செய்து கொண்டாள்,
ஏழையை மணந்து கொண்டேன் எனக்கூறத்
தாய், தீ மிதித்தன்ன துடித்திட்டாள் பதறி!

பணமன்றோ பாதகத்தின் இருப்பிடம்
பணமில்லா வாழ்க்கையன்றோ பரமன் வழி
பணமற்றவனை மணந்ததனாலே என்று

பாவை அவள் பேசுகிறாள். தாய் ஒப்பவில்லை

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/109&oldid=1380138" இலிருந்து மீள்விக்கப்பட்டது