பக்கம்:கனியமுது.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

நீரோடை ஓரத்தில் நீண்ட பழங்காலக்
கூரைவீ டொன்றிற் குடியேறி, இன்பமுடன்
ஆடம் பரமின்றி, அன்பால் அகமொன்றித்
தேடரிய வாழ்வில் திளைத்தார் இருவருமே!
ஒன்றாய்ப் பணியாற்றி உள்ளதைக் கொண்டுமனம்

நன்றாய் மகிழ்ச்சியுற நல்லறம் பேணிவந்தார் !

உந்துவண்டி ஏற்றி, முன் ஊர்சுற்றிக் காட்டியவன்
வந்திட்டான்; இங்கிருவர் வாழ்வதனைக் கண்டறிய—
தன்னை மணக்காமல் தன்போக்கில் ஏழையின்
பின்னே நடந்திட்ட பெண்ணைப் படம்பிடிக்கக்—
கந்தலுடைக் கோலம் கண்டான்; வறுமையிலும்
சிந்தை தளராமல் சிற்றெறும்பாய்ச் சுற்றிவந்தாள்

சேர்ந்து சமையல்கள் செய்திட்டாள்;

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/112&oldid=1380163" இலிருந்து மீள்விக்கப்பட்டது