பக்கம்:கனியமுது.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

ஒழுக்கல்மிகு கூரையினைச் செப்பனிட அவளும்
முயன்றதிலே தோற்றனள், மழைநீரில் நனைந்தே,
இந்தவித இடர்ப்பாட்டில் இவளுள்ளாள்
ஏழையை மணந்ததனால் நேரிட்ட கதியும்
என்றெல்லாம் ஏதேதோ எழுதலா மன்றோ?
சீற்றம் அவனுக்கு-ஆனால் சிந்தித்தான் வாலிபனோ மிகவும்

மறுநாள் மனைவிட்டுச் சென்ற மணவாளன்
மாலையும் வரவில்லை, இரவுங் காணோம்
என்னானான் என்றெண்ணி ஏக்கம் கொண்டவளும்
இல்லத்தில் காத்திருந்தாள் வரவு எதிர்பார்த்து
எங்கு சென்றனன் ? ஏனிந்த மர்மம்?
எனைத்தனியே வீட்டகன்றுமே வேதனைத்தீயை என் மூட்டினான்

என்று சினந்தனள் சிற்றிடைப் பெண்ணாள்
நெஞ்சினில் அவனைத்தாங்கி, நீர்சொரி கண்களோடு
சந்தைச் சதுக்கப்பக்கம் சென்றனள் சுந்தரியும்
விந்தையைக் கண்டாற்போல வீழ்ந்தடித்துக் கும்பல்

ஆங்கொரு கடையை நோக்கி விரைந்திடக் கண்டாள் பெண்ணாள்

102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/113&oldid=1380173" இலிருந்து மீள்விக்கப்பட்டது