பக்கம்:கனியமுது.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

‘குருதி குத்திடும் கொல்புலியின் நாவிற்
பிறிதோர் சுவையும் பிடிக்காதாம்! மாந்தரையே
கொன்று சிவப்பிரத்தம் கொள்ள வெறியாகும்’—
என்றுரைப்பர் காட்டு விலங்கின் இலக்கணமாய்
பொன்னாசை கொண்டோரும் போதுமென எண்ணாமல்
எந்நாளும் பித்தமிக ஏறி அலைவாராம்!


இந்நிலையில் ஆயினான் இன்பவல்லி காதலனும்;
தன்னிலையை மற்றவன் தாழ்வாகப் பேசியதால்—
சூடு பிறந்ததும், சூறைப் பெருங்காற்றால்
ஆடும் மரம்போல ஆசை அலைக்கழிக்க,
வெற்றி பெறுமட்டும் வேறெதையுங் காணாமல்

உற்ற மனையாளின் உண்மையன்புந் தான் துறந்து,

107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/118&oldid=1380222" இலிருந்து மீள்விக்கப்பட்டது