பக்கம்:கனியமுது.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

அங்கு குறுக்கிட்டது மற்றோர் அரவு
அழகுளது! ஓர் வாலிபன் உருவினது!
அன்னவனோ செல்வத்தில் புரள்பவன்! சீமான்!
விநாடிக்கு விநாடி அவன் வேலை செய்கின்றான்
விண்ணிலே பறக்கையிலும் வேலை செய்கின்றான்
விழியாலே அவன் நுழைந்தான் பெண்மனத்தில் அன்றே
அவனை மணக்கின்றாள் ஆரணங்கு மகிழ்ந்து
பொருள் தேடி அலைந்திடத் தேவையில்லை அதனாலே
பொங்கிடும் காதலுடன் வாழ்ந்திடுவான் என்று
நம்பிக்கொண்டாள் அந்த நங்கை; அய்யோ, பாவம்!
ஆடலிலும் பாடலிலும் விழா தனிலும் மிகவும்
ஆவலுடனே அன்னவன் ஈடுபடுகின்றான்.
பூங்காவில் உலவுகிறார் புதுக்கீதம் பாடி
காண்போர்கள் வியந்திடவே கவர்ச்சிகரமாக !
அவள் அணியும் ஆடைகள் அலாதி அழகு!
ஆபரணம் புதுவிதம், அலங்காரமுங்கூட
விருந்துகளில் அவள்! பலர் விழிக்கு விருந்தாக—

சிறந்ததொரு வாழ்வு சிங்காரமாக.

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/123&oldid=1380258" இலிருந்து மீள்விக்கப்பட்டது